தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக முதல்வர் வருகை தொடர்பான - முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச்செயலாளர் பொ.சங்கர் கலெக்டர்என்.வெங்கடேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில், கலெக்டர்அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு அரசுத் துறைகளின் சார்பிலும் வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், தமிழக முதலமைச்சர் அவர்களால் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும், புதிதாக அடிக்கல் நாட்டப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்தும், விரிவாகத் துறை அலுவலர்களுடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விரிவாக ஆலோசனை செய்தார்கள். மேலும், விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் ஒவ்வொரு துறையிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்தார்.பின்னர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:-
பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 22.11.2017 அன்று சிறப்பாக நடைபெறுவது, நமது மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பாகும். புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.அவர்களால் உருவாக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டமாகும். எனவே, மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா தாம் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் போதே புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்கள். அதனடிப்படையில், 22.11.2017 அன்று நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவிக்கவும் உள்ளார்கள். இவ்விழாவில், வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத் துறை, கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழில் வணிகத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் அதிகளவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட தயார் நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ள திட்டப் பணிகள் விவரங்களையும், புதிதாக அடிக்கல் நடப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் தயார் நிலையில் உள்ளது.
திரளாக பங்கேற்க வேண்டுகோள்
இவ்விழாவில், பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து சிறப்பிக்கவுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு வசதிகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக விழா முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இவ்விழா மிக, மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது என்ற பெருமையை தேடித்தரும் வகையில் சிறப்பாக விழாவினை நடத்திட வேண்டும். மேலும், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், பாரத பிரதமர் முன்னிலை வகிக்கவுள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் மற்ற மாவட்டத்தை விட நமது தூத்துக்குடி மாவட்டம் மிகசிறப்பாக பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினை நடத்தியமைக்கான முதல் பரிசினை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விழாவினை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். - என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தார்கள். முன்னதாக பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள இடம் தேர்வு செய்வது தொடர்பாக கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மைதானத்தினை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச்செயலாளர் பொ.சங்கர் கலெக்டர்என்.வெங்கடேஷ் ஆகியோர்கள் முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய வங்கி கூட்டுறவுத்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்..அல்பிஜாண் வர்க்கீஸ் சார் ஆட்சியர் பிரசாந்த் உதவி ஆட்சியர் (பயற்சி) சரவணன் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, கோட்டாட்சியர்கள் அனிதா, கணேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.