கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் சிறுபான்மையினர் தின விழா: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி
3 a

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் சிறுபான்மையினர் தின விழா மாவட்ட ஆட்சித்; தலைவர் சி.கதிரவன் தலைமையில் நேற்று (19.12.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அ. அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்ககங்கள் இணை பதிவாளர் பாண்டியன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் மத்திய மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். பின்பு சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி கலெக்டர் பேசினார்.

உதவித்தொகை

பின்பு கலெக்டர் பேசியதாவதுதமிழக அரசு பிற்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, மாவட்ட முஸ்ஸீலம் மகளீர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள், ஜெருசலேம் புனித பயணத்திற்கு நிதியுதவி, தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிக்காக நிதியுதவி, சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடனுதவிகள், என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேற்கண்ட நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் நல மாணவமாணவியர்கள் நல விடுதிகளை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உருது கல்வியை கற்பது மட்டுமல்லாமல் இன்றைய காலநிலைக்கு ஏற்றவாறு ஆங்கில வழிக்கல்வியையும் கற்க வேண்டும்.

இலவச வீட்டுமனை

கிருத்துவர்களுக்கு ஒசூரில் கல்லறை அமைப்பதற்கு விரைவில் மாற்று இடம் தரப்படும். வீடற்ற ஏழை சிறுபான்மையினருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும். தற்போது சாதாரண தையல் இயந்திரத்திற்கு பதிலாக எம்பிராய்டரி தையல் இயந்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தையல் பயிற்சிக்காகவும், சமையல்கலை அறிந்துகொள்வதற்காகவும், விருப்பமுள்ள மகளிருக்கு பயிற்சி அளித்து சுயதொழில் செய்திட ஏதுவாக வழிவகை செய்யப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வக்பு வாரிய தலைவர் முனாவர்பேகம், செங்கல் தோப்பு தர்கா தலைவர் ஏ.சையதுநசீர், வழக்கறிஞர் சாதிக், முன்னாள் நகர் மன்ற தலைவர் பரிதாநவாப், முஸ்ஸீம் மகளீர் உதவும் சங்க தலைவர் ரவீதா, சிறுபான்மையினர் நுகர்வோர் விழிப்புணர்வு நல பாதுகாப்பு சங்க தலைவர் டேனியல்சக்கரவர்த்தி, ஏ.ஆ.சி.எச். பிஷப் . பென்னிஏசு, மாவட்ட வக்பு வாரிய வழக்கறிஞர். ஷாபிக் அகமது, ஐடியல் நிறுவன தலைவர் மனோகரன், ஆகியோர் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து