முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதம்பாக்கம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      சென்னை

சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது தெரு, எண்.324 என்ற முகவரியில் வசிக்கும் ஜோசப் டேனியல், என்பவர் அப்பகுதியிலுள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறார். ஜோசப் டேனியல் கடந்த 24.12.2017 அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வாடிக்கையாளர் வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு, இரவு சுமார் 10.00 மணியளவில் கடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

விசாரணை

அப்பொழுது, டுழஊ நகர் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஜோசப் டேனியலின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து ஜோசப் டேனியல் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் மணிமாறன், விஜயசேகரன், ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து, ஜோசப் டேனியலிடமிருந்து பறித்துச் சென்று ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் குற்றச் செயலக்கு பயன்படுத்திய ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல ஆதம்பாக்கம், மஸ்தான் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், /20 என்பவர் கடந்த 22.12.2017 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில், அப்பகுதி யாதவா தெருவில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ராஜ்குமாரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கருணா () கருணாகரன், மற்றும் ஆகாஷ், ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

குற்றவாளிகளிடமிருந்து மேற்படி செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் குற்றவாளி கருணா () கருணாகரன், ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனத் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து