ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      தூத்துக்குடி
sorkka vasal thirappu

ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.

சொர்க்கவாசல் திறப்பு

வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் கரையோர நகரமான ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ‘’மார்கழி திருஅத்யயன திருவிழா’’வாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான மார்கழி திருஅத்யயன திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு காலை 6மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் தாயார் ஆழ்வாராதிகளுடன் ஷேசசயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோவிலில் இன்று இரவு 7.40மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. சுவாமி கள்ளபிரான் தங்கத்தோளுக்கிணியான் வாகனத்தில், தங்ககுடை தாங்கி, ரத்தின தலைப்பாகை அணிந்து, சக்கர தீப்பந்தங்களின் அணிவகுப்புடன் ராஜநடை, சர்ப்ப நடை, கஜநடை போட்டு பக்தர்களோடு அணிதிரண்டு வர பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.இதில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.விழாவினை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., சகாயஜோஸ் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து