முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      திருநெல்வேலி
Muthra Thittam Loan Mela nellai collector

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வங்கிக்குழு சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாமினை கலெக்டர் சந்தீப் நந்தூரி,   துவக்கி வைத்து, பல்வேறு வங்கிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 366 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.பின்னர், கலெக்டர்  பேசியதாவது-

முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம்

மத்திய, மாநில அரசுகள் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தொழில் தொடங்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில் அதிகளவில் தொழில் தொடங்கிட முத்ரா திட்டம், நீட்ஸ் திட்டம் உள்ளிட்ட பலத்திட்டங்களின் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கி கடன் உதவிகளை அனைவரும் தெரிந்து கொண்டு, கடன் பெறுவதற்கான விதிமுறைகளையும், திட்டங்களையும் அறிந்து தொழில் தொடங்கிடும் வகையில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்கிடும் கடனுதவிகள் அனைத்தும் வங்கிகள் மூலம் தான் வழங்கப்படுகிறது. வங்கிகள் கடனுதவி பெற்று, தொடங்கப்படும் தொழில்கள் இலாபகரமானதா என்பதனை வங்கிகள் ஆய்வு செய்து வழங்குவதால் அதற்கு தகுந்தவைகளான தொழில்களை தேர்வு செய்திட வேண்டும். நல்ல இலாபம் வரும் வகையிலும் மற்றவர்களை பாதிக்காத வகையிலான தொழில்களை இளைஞர்கள் தேர்வு செய்திட வேண்டும். முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.10 இலட்சம் வரையிலான கடன் பெற பிணையம் தேவை இல்லை. இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தொழில் கடன் பெறும் அனைவரும் சிறப்பாக தொழில் செய்து, பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டுமென பேசினார்.இம்முகாமில் நிதிசார் கல்வி ஆலோசகர்கள் பார்த்திபன், மகாலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கஜேந்திரன்நாதன், நபார்டு வங்கி டிடிஎம் சலீமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேஸ்வரன்,  முதன்மை மண்டல மேலாளர் ராஜாகுமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன பிரதிநிதி இளங்கோ மற்றும் வங்கியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து