நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 விவசாயிகளுக்கு ரோட்டோவேட்டர் இயந்திரங்கள்கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
Agri Grivence day nellai collector

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி  தலைமையில் நடைபெற்றது.

குறைதீர்  கூட்டம்

இக்கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 338 மனுக்களில் வேளாண்மையைச் சார்ந்த 194 மனுக்கள்  மற்றும் வேளாண்மை சாராத 144 மனுக்களுக்கும் பதில்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர்  பெற்றுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மானியத்திலானரோட்டோவேட்டர் இயந்திரங்களையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஒரு விவசாயிக்கு ரூ.17700/-க்கான தீவன தட்டுக்களையும், தாது உப்புக் கலவையினை 5 விவசாயிகளுக்கும், தேசிய தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கும், மொத்தம் 19 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர்  பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  20ம் தேதி முடிய 19.08 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அணைகளில் 34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 15 சதவீதம் நீர் இருப்பு மட்டுமே இருந்தது. மாவட்டத்தில் பிசான பருவத்தில் 58,697 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையினை விட குறைவாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 46 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்சமயம் 19 கிராமகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 1981.48 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660/- ஆகவும், இதர ரகங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600/- ஆகவும், தமிழக அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டு நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்த 28,174 விவசாயிகளுக்கு ரூ.54.40 கோடி காப்பீடுட்டுத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஒரு சில கிராமங்களில் குறைவாக பெறப்பட்டுள்ளதாக வரப்பெற்ற புகாரினை ஆய்வு செய்த அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்ட உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற ஐஊஐஊஐ நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்காச்சோளம் மற்றும் பாசிப்பயிறுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.30 கோடி காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2017-2018) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 65,748 விவசாயிகள் 1,35,902 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பருத்தி பயிருக்கு விவசாயிகள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 28.07.2018 ஆகவும், கரும்பு பயிருக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கடைசி நாள் 31.10.2018 ஆகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை 2017-18ம் ஆண்டு வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு இதுவரை 266 விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்தியுள்ளனர். தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையினை செலுத்த கடைசி நாள் 28.02.2018-ல் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அiவைரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரம் கணக்கெடுப்பு பணியினை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி-2018ம் தேதி புதன்கிழமை வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், வேளாண்மைத் துறை, வனத்துறை அலுவலர்கள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை மனுக்களின் மீது அனைத்து துறை அலுவலர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் கோட்டாட்சித் தலைவர் (திருநெல்வேலி) மைதிலி, வோண்மைத் துறை இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அற்புதம்  மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து