முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க திட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      கடலூர்
Image Unavailable

கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க திட்டத்தினை கலெக்டர் வே.ப.தண்டபாணி  தொடங்கி வைத்து தெரிவித்ததாவது.

தேசிய குடற்புழு நீக்க முகாம்

ஒவ்வொரு தனிமனிதனும் அவர்களது ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளும் வகையில் நன்கு தரமான உணவினை உட்கொள்ளவேண்டும். மேலும் சுற்றுப்புறம் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திறந்தவெளியில் மலம் கழித்திடாமல் ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிவறை கட்டப்பட்டு அவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கவேண்டும். அவ்வாறு பராமரிப்பதால் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதன்பேரில் இன்றைய தினம் தேசிய குடற்புழு நீக்க திட்டத்தினை துவக்கி வைத்து  தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) 1 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் ஒரே நாளில் வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் அரசு, அரசு உதவி பெறும், தனியார், சி.பி.எஸ்.சி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லாதவர்களுக்கு அங்கன்வாடி மையங்களிலும் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி இலவசமாக வழங்கப்பட உள்ளது.6 மாதம் முதல் 59 மாதங்கள் வயதுடைய குழந்தைகளில் 10 ல் 7 குழந்தைகள் (70மூ), 15 முதல் 19 வயதினரிடையே (56மூ) இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 8,80,000 குழந்தைகளுக்கு இம்மாத்திரை வழங்கப்பட உள்ளது. இம்மாத்திரைகளை உணவு உண்ட பின்னர் நன்றாக கடித்து மென்று சாப்பிட வேண்டும். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள சிறு குழந்தைகளுக்கு திரவ வடிவல் (சிரப்பு) வழங்கப்படுகிறது. இதற்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டமும், பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்வதினால் எந்த பின் விளைவுகளும் ஏற்படாது.            எனவே இவ்வறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அளித்து தங்கள் குழந்தைகளை இரத்தசோகை, ஊட்டசத்து குறைவு மற்றும் வளர்ச்சி குறைவு போன்ற குறைபாடுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.     இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.ஹபிசா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.கே.ஆர்.ஜவஹர்லால், முதன்மை கல்வி அலுவலர் இராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள், பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் நகர்நல அலுவலர் மரு. பி.எழில்மதனா  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து