எஸ்.ஆர்.எப் நிறுவனத்தின் மூலம் அரசு பள்ளிக்கு நூலக வசதி

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      சென்னை
G pundi 1

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எப் நிறுவனத்தின் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட சிறப்பு நூலகம் அமைத்து தரப்பட்டு அதன் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது.

நவீன நூலகம்

 கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைுப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.பெலிசியா இஸபெல்லா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் .பிரபாகரன் வரவேற்றார். எஸ்.ஆர்.எப் நிறுவன தலைமை மனித வள மேலாளர் ஆர்.நாகராஜ், நிர்வாக மேலாளர் ராஜகோபால், சமூக பணி மனித வள மேலாளர் டீனா முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் டி.கே.மாரிமுத்து, நாகமணி வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்ற எஸ்.ஆர்.எப் நிறுவன தொழில் தலைவர் எஸ்.உதயகுமார், தொழிற்சாலை தலைவர் அஜய் லோரின் கலந்துக் கொண்டு பள்ளிக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன நூலகத்தை திறந்து வைத்து மாணவர்கள் நூலகத்தை தினந்தோறும் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நூலகத்தின் சுவர்கள் அழகிய கண்கவர் ஓவியங்கள் இடம்பெற்றும், தரையில் வெல்வெட் விரிப்பான் பொருத்தப்பட்டு, பலதுறை புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நூலகத்தில் விரும்பி புத்தகத்தை படிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நூலகத்தில் கணினி வசதியும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விழாவில் எஸ்.ஆர்.எப் நிறுவனம் மூலம் 15 மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது. அதே போல தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை சுத்தமாகை வைக்க எஸ்.ஆர்.எப் நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கிய தூய்மை கருவிகளை முறையாக பயன்படுத்தி பள்ளி வளாகத்தை சுத்தமாக வைக்கும் மாணவிகளுக்கு ஊக்க பரிசுகளும் விழாவில் வழங்கப்பட்டது.

விழா முடிவில் உதவி தலைமை ஆசிரியர் டி.விஜயா நன்றி கூறினார். தொடர்ந்து கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நவீன நூலகம் திறக்கப்பட்டதுடன், 15 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து