அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Rahul Gandhi 2019 05 02

புதுடெல்லி :  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி பெறுவார் என்று இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.  

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை பா.ஜனதா களம் இறக்கியது.

ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார். அமேதியில் தோல்வி பயம் ஏற்பட்டு விட்டதால் அவர் வயநாடு தொகுதிக்கு ஓடி விட்டார் என்று பா.ஜனதாவினரும் ஸ்மிருதி இரானியும் பிரசாரம் செய்தனர். 

ஆனால், ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி பெறுவார். அமேதியில் அவர் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரசார் தெரிவித்தனர். என்றாலும் ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார்.

அமேதியில் 5-ம் கட்ட தேர்தலாக கடந்த மே-6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 57,33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடைசி கட்ட தேர்தல்  முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாயின.

இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறும் போது, “ராகுல்காந்தி அமேதியில் வெற்றி பெறுவார். ஆனால் ஸ்மிருதி இரானி அவருக்கு கடும் போட்டியைத்தருவார். அதனால் வாக்குகள் வித்தியாசம் பயமுறுத்தும் வகையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து