தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் மரணம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      உலகம்
South Africa Indian Writer 2019 06 14

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் அகமது ஈசாப் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி எழுத்தாளர் அகமது ஈசாப் (வயது 88). இந்தியாவில் 1931-ல் பிறந்த இவர் குழந்தைப் பருவத்திலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.இவர் அங்கு எண்ணற்ற பட்டங்களை பெற்று, பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகவும், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார். 13 புத்தகங்களை எழுதி உள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.ஜோகன்னஸ்பர்க் அடுத்த லெனாசியா நகரில் அவரது உடல் 11-ந் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து