முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
KN-Nehru 2023 04 01

திருச்சி, திருச்சி மாநாட்டில் வருங்கால திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9-ம் தேதி நடைபெறும் தி.மு.க. மாநில மாநாட்டு திடலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘‘முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இதே இடத்தில், பாசனம், மருத்துவம், கல்வி வசதி உள்ளிட்ட 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றி பெற்றார். 

அதேபோன்று இந்த மாநாட்டிலும் தமிழக நிதி நிலைக்கு ஏற்ப வருங்கால திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார். மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் விரிவான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. 10 மருத்துவக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 24 ஆயிரம் வாகனங்கள் வரும் என போலீஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. போதுமான வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தி.மு.க. மாநாடு. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் தெரிவிப்பார். முதல்வர் ஸ்டாலின் மாலை 5.30-க்கு மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருவார்’’ என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து