முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க.வுடன் தேர்தல் கூட்டணி; நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
Ramadoss-1

சென்னை, த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுடன் புதிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. அல்லது அதி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு கட்சிகளுடனும் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடித்ததால், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. தமிழ்நாட்டில், டாக்டர் ராமதாஸ், புதிய தமிழர் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் மட்டுமே இன்னும் முடிவை அறிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், காத்திருந்தும் பலன் இல்லை என்பதை புரிந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிர்வாகிகள் மத்தியில் பேசிய டாக்டர் ராமதாஸ், "நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாமா?" என்று கருத்து கேட்டார். பெரும்பாலான நிர்வாகிகள், "தனித்து போட்டியிடுவதைவிட, பலத்தை நிரூபிக்கும் வகையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே நல்லது" என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில், டாக்டர் ராமதாசும் த.வெ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாமா? என யோசித்து வருகிறார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாமகவுக்கு செல்வாக்குள்ள 35 தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவதன் மூலம் சரிந்த செல்வாக்கை மீட்பதுடன் அன்புமணிக்கும் பாடம் புகட்டலாம் என்று டாக்டர் ராமதாஸ் கருதுகிறாராம். 

இதற்கிடையே, பாமக தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வரும் 9-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில், அன்புமணி தரப்பும், தேர்தல் கமிஷனும் விளக்கம் அளிக்க உள்ளன. எனவே, அதுவரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன்பிறகு முடிவை அறிவிக்கலாம் என டாக்டர் ராமதாஸ் காத்திருக்கிறாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து