முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்தது

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து விற்பனையானது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்துள்ளது. 

சர்வதேச அளவில் போர்ப் பதற்றம் நிலவி வருவதை அடுத்து தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும்(மார்ச் 6) தங்கம் விலை குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2ல் சவரனுக்கு ரூ. 920, மாா்ச் 3ல் சவரனுக்கு ரூ. 1,560, மார்ச் 4 -இல் சவரனுக்கு ரூ. 2,120, மார்ச் 5-ல் சவரனுக்கு ரூ. 640 குறைந்தது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 6, வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 160 குறைந்து ரூ.14,960-க்கும் சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையானது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து