முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை, அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவியை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரிந்த தலைவர்கள் மூலம் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அந்த கோரிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் நிராகரித்தனர். 

இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம்  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். மேலும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான  ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். 

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தி.மு.க.வில் செல்ல மனம் இடம் தரவில்லை என்று கூறி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவியை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து