முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில கண்ணிவெடி வெடித்ததில் சிரியாவில் 7 குழந்தைகள் பலி

புதன்கிழமை, 10 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 9-வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரிய நாட்டில் டெய்ர் அல் ஜாவ்ர் நகரில் தப்லான் பகுதியில் நில கண்ணிவெடிகள் ஐ.எஸ். அமைப்பினரால் புதைக்கப்பட்டு உள்ளன. அவர்களை விரட்டி விட்டு அப்பகுதியை அரசு கைப்பற்றியது. இதன்பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அவற்றை நீக்கும் பணியில் அரசு தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அவர்கள் விட்டு சென்ற கண்ணிவெடிகளில் ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, சிரியாவின் தெற்கே நில கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகினர். மற்றொரு குழந்தை காயமடைந்தது.

இதே போன்று சிரியாவின் வடக்கே அலெப்போ நகரில் கடந்த மார்ச் 6-ம் தேதி நில கண்ணிவெடி ஒன்று வெடித்து 7 பேர் கொல்லப்பட்டனர். அதே அலெப்போ நகரில் மார்ச் இறுதியில் மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சிரியாவின் மத்திய பகுதியில் இதேபோன்று நடந்த மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்களில் மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து