பாக். மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      உலகம்
pak hospital attack 2019 07 21

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மருத்துவமனை வளாகத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தேரா இஷமாயில் கான் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனை வளாகத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்று காலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினர். இந்த சம்பத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே கொட்லா சைடன் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அங்கிருந்த போலீசை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 2 பேலீசார் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து