முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

அபுதாபி : 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவே உலகின் பழமையான முத்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று சமீபத்தில் கிடைத்து உள்ளது. அங்குள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதில் கற்காலத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதில் மிகப்பெரிய பொக்கிஷமாக, பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத்துள்ளது. உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப்பாக கி.மு. 5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த முத்து கண்டுபிடிக்கப்பட்டதால், அமீரக தொல்பொருள் ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. அபுதாபி முத்து என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் (பாரீசில் உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகத்தின் கிளை) 30-ம்தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து