முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      விளையாட்டு
Suresh-Raina 2025-07-08

Source: provided

மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள்...

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி மோசமாக தோற்றதன் எதிரொலியாக இந்திய வீரர்களுக்கு, கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

விராட் கோலி எதிர்ப்பு...

இந்த விதிமுறைக்கு விராட் கோலி உள்பட சில முன்னணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் விராட் கோலி தனது எதிர்ப்பை நேரடியாகவே காட்டியிருந்தார். இதனிடையே கோலி உள்ளிட்டோரின் அதிருப்திக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்தார். குடும்பம் என்பது முக்கியமானதுதான் ஆனால் நாம் விடுமுறையை கொண்டாட வரவில்லை என்று கூறியிருந்தார். அத்துடன் வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். ஒவ்வொருவருக்கும் குடும்பம் முக்கியமானது. ஆனால் உங்களுடைய கவனம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

எதிரானவன்...

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, இந்த விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கருத்துகளை கூறியுள்ளார். அதில், "சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினருடன் இருப்பது மிகவும் முக்கியம். குடும்பத்தினரை அனுமதிக்கக் கூடாது முடிவை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளது. இந்த முடிவுக்கு நான் எதிரானவன். நீங்கள் வீரர்களை இரண்டு மாதங்களுக்கு ஒரு சுற்றுப்பயணத்திற்கு அனுப்புகிறீர்கள் என்றால் குடும்பத்தை அனுமதிக்க வேண்டும். அவர்கள் (குடும்பத்தினர்) வீரர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. 

பெருமையான தருணம்...

நாங்கள் ரன்கள் எடுக்க வேண்டும், நாடு வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் விராட் கோலி விளையாடி கொண்டிருக்கும்போது அவருடைய மகள் மைதானத்தில் இருந்து கைகளை தட்டி உற்சாகப்படுத்துவது எவ்வளவு பெருமையான தருணம். அப்போது விராட் தீயாக விளையாடுவார்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து