எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வைகை மற்றும் மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி III-க்கு 9.11.2019 முதல் 16.11.2019 வரை உள்ள 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசனப்பகுதி II-க்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை 4 நாட்களுக்கு 386 மில்லியன் கன அடியும், 22.11.2019 முதல் 25.11.2019 வரை மூன்று நாட்களுக்கு 48 மி.க.அடியும் பகுதி I-யை சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு, விரகனூர் மதகணையில் வழங்கவும் மற்றும் வைகை பூர்வீகபாசனப்பகுதி I-க்கு 26.11.2019 முதல் 2.12.2019 வரை 240 மில்லியன் கனஅடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு 9.11.2019 முதல் 90 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனம் பெறும் 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம்: ஈரான் அமைச்சர் அப்பாஸ்
26 Feb 2026தெஹ்ரான், சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
-
72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்
26 Feb 2026சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 215.79 கோடியில் 65 முடிவுற்ற பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Feb 2026சென்னை, ரூ.215.79 கோடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அ.தி.மு.க.வில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
26 Feb 2026கோவை, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
-
8-ம் வகுப்பு புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆா்.டி.
26 Feb 2026புதுடெல்லி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்
-
நல்லகண்ணுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன்: மத்திய அமைச்சர் எல். முருகன் தகவல்
26 Feb 2026சென்னை, நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
-
கட்சி 'ரோடு ஷோ' விதிகளுக்கு எதிராக வழக்கு: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
26 Feb 2026சென்னை, கட்சி ரோடு ஷோக்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி த.வெ.க.
-
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு: சென்னையில் 3 நாட்கள் முகாமிடும் இ.டி. தலைமை இயக்குநர் ராகுல்..!
26 Feb 2026சென்னை, சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வருகை தந்துள்ளார்.
-
உதய்ப்பூரில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் கோலாகலம்.!
26 Feb 2026உதய்ப்பூர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நேற்று காலை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்: முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி சாதனை..!
26 Feb 2026புதுடெல்லி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
-
விரைவல் 2,700 உதவி பேராசிரியர்கள் தேர்வு: 9646 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
26 Feb 2026சென்னை, 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 9646 பேருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கோ
-
பிரதமர் நரேந்திர மோடியை இந்திய உடையில் வரவேற்ற நெதன்யாகு
26 Feb 2026டெல் அவிவ், இந்திய பாரம்பரிய உடையணிந்து மோடியை வரவேற்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
-
தங்கத்தின் விலை சற்று சரிவு
26 Feb 2026சென்னை, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.
-
திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி: பிப்.28-க்குள் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
26 Feb 2026சென்னை, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி என்றும் பிப்.28-க்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்
26 Feb 2026காங்டாக், சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
-
ரஷ்ய பெண்களுடன் உறவு: உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்
26 Feb 2026வாஷிங்டன், ரஷ்ய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என்றும் தெரிவித
-
ரயில் பயணங்களின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் இனி அபராதம்: இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
26 Feb 2026சென்னை, ரயில் பயணங்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கற்பனை உலகில் வாழும் பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
26 Feb 2026ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
-
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி
26 Feb 2026டெல் அவீவ், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் மால ைமாற்றுதல், தங்க தோலுக்கினியானில் பவனி.
- பெருவயல் முருகப்பெருமான் சண்முக உற்சவம்.
- மதுரை கூடலழகர் காலை ஏணிக்
-
இன்றைய நாள் எப்படி?
26 Feb 2026


