முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா பயணியை கொன்றது சுறா மோதிரம் மூலம் கண்டுபிடித்தார் மனைவி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்தில் மனைவியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வந்த சுற்றுலா பயணி சுறாக்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கை சேர்ந்தவர் ரிச்சர்ட் மார்டின்(44). இவர் தனது மனைவியின் 40-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து சென்றார். இந்திய பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவிற்கு மனைவியுடன் ரிச்சர்ட் சென்றார். கடந்த 2-ம் தேதி தீவில் நீச்சலடிப்பவர்களுக்காக பாதுகாப்பான இடம் என குறிப்பிடப்பட்டு இருந்த நீர்பரப்பு பகுதியில் ரிச்சரிட் நீச்சலிட்டு மகிழ்ந்தார். அப்போது திடீரென அவரை சுறாக்கள் தாக்கின. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவரது சிதைந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அவரது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வைத்து இறந்தது ரிச்சர்ட் என அவரது மனைவி உறுதி செய்தார். ரிச்சர்ட் நீச்சல் செய்த பகுதியில் இருந்து 4 சுறாக்கள் பிடித்து கொல்லப்பட்டன.  13 அடி நீளமுள்ள டைகர் சுறாவின்  வயிற்றில் இருந்து ரிச்சர்டின் கை மற்றும் முழங்கை உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. சுறாவின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல், மற்ற சுறாக்களின் வயிற்றிலும் மனித உடல் பாகங்கள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து வெளியுறவு துறை அலுவலகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து