முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலியை நேசிக்கும் டேவிட் வார்னர் மகள் இவி மே

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அதிகம் நேசிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மகள் இவி மே.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் டேவிட் வார்னர். இவர் வீட்டில் விளையாடும்போது மகளுக்கு எதிராக பந்தை வீச, அதை எதிர் கொண்ட அவரது மகள் இவி மே, நான் விராட் கோலி என கெத்தாக பந்தை விளாசினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டேவிட் வார்னர் நேற்று தனது வீட்டில் 3 வயது மகளுடன் கிரிக்கெட் விளையாடினார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் டேவிட் வார்னரின் மகள் இவி மே, ‘‘நான் விராட் கோலி’’ என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும்  காட்சி பதிவாகியுள்ளது. அதேபோல தனது தந்தை டேவிட் வார்னரை போல் விளையாடியும் காட்டுகிறார்.
இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. இன்டி விராட் கோலி போல் ஆக விரும்புகிறாள் என எழுதியுள்ளார்.அதேபோல் வார்னின் மனைவி கேண்டிஸ் இந்த சிறுமி இந்தியாவில் நீண்ட நாட்கள் தனது நேரத்தை செலவிட்டுள்ளர். இதனால் அவர் விராட் கோலியை விரும்புகிறாள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து