6 மாநிலங்கள் பங்கேற்ற தென்னிந்திய ரோல்பால் போட்டி பெண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      திண்டுக்கல்
8 dglsports

திண்டுக்கல்,- 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள், பெண்களுக்கான தென்னிந்திய ரோல்பால் போட்டிகள் சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் தனித்தனியாக  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான ஆகிய 6 மாநில ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.
   இதில் புள்ளிகள் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை கேரள அணி பிடித்து வெற்றிப் பெற்றது. இரண்டாவது இடத்தை தமிழக அணி பிடித்தது. 3 வது இடத்தை ஒரே புள்ளிகளை பெற்ற புதுச்சேரி அணிக்கும், கர்நாடகா அணிக்கும் கிடைத்தது.
   பெண்கள் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழக அணி முதலிடத்தை பிடித்து வெற்றிப் பெற்றது. இரண்டாவது இடம் கேரளா அணியும், 3 வது இடம் புதுச்சேரி அணியும், கர்நாடகா அணியும் பிடித்தது. முதலிடம் பிடித்த ஆண்,பெண் அணிகள் வருகிற 29 தேதி முதல் 31 ம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும்.
  தென்னிந்திய அளவில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு கோப்பையும், சான்றிதழ்களை ரோல்பால் ஆசோசியேசன் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமையில் மாநில ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் பூபதி ஆகியோர் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து