அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      வர்த்தகம்
dollar rupees

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் காணப்படும் சாதக நிலையால் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனம் அடைந்தது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்து ரூ.71.23 ஆக உள்ளது. எனினும் மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 108.21 புள்ளிகள் சரிவடைந்து 41,449.79 ஆக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 28.10 புள்ளிகள் சரிந்து 12,227.75 புள்ளிகளாக உள்ளது. ஆண்டு நிறைவில் விடுமுறை வந்துள்ள நிலையில், சந்தைகளில் வர்த்தகம் தேக்கமடைந்து உள்ளது. இது உலகளவில் வர்த்தகத்தில் எதிரொலித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து