நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      விளையாட்டு
Hockey india win 2020 01 26

ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு ஆட்டத்திலும் விளையாடுகிறது. இந்தியா - நியூசிலாந்து மேம்பாட்டு அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி ஆக்லாந்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பின் பாதியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தாலும் கடைசி வரை அந்த அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இந்திய தரப்பில் கேப்டன் ராணி ராம்பால் 2 கோலும், ஷர்மிளா, நமிதா டாப்போ தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து