முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து - கமல்ஹாசனிடம் அதிரடி விசாரணை

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2020      சினிமா
Image Unavailable

சென்னை : இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கமலிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது .

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன் - 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறினேன். இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து