தங்கம் விலை மேலும் ரூ.64 உயர்வு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2020      வர்த்தகம்
gold price 2020 03 05

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.33,088 - க்கு விற்பனை ஆகிறது

கொரோனா வைரஸ் தாக்கம் பங்குசந்தைகளையும் பாதித்தது. எனவே தங்கத்தில் முதலீடு அதிகரித்து விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த 24 - ந்தேதி ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை சற்று குறைவதும், உயர்வதுமாக இருந்தது.நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.824 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.33,024-க்கும், ஒரு கிராம் ரூ.4,128-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,136-க்கும், பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.33,088-க்கும் விற்பனை ஆகிறது.வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.49.90-க்கும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.49 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து