முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. அலுவலகம் மற்றும் கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்: விஜயகாந்த் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தே.மு.தி.க. அலுவலகம், கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தையும் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முகக்கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தே.மு.தி.க.வினர் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து