முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது, மேலும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் போன்றவையும் 9-ம் தேதி முதல் செயல்படும் என முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். மேலும் சபரிமலைக்கு முதியோர், குழந்தைகள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு வரும் 9-ம் தேதி முதல் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன, ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களும் திறக்கப்பட உள்ளன. 

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

மாநிலத்தில் வரும் 9-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்ள் உள்ளி்ட்டவற்றை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இவை திறக்கப்படுவதறக்கு முதல்நாள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். கோயில்களின் அளவைப் பொறுத்து பக்கதர்களை அனுமதிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் முடிவு செய்யும். 100 சதுர மீட்டருக்கு 15 நபர்கள் மட்டுமே 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும்.

அதிகபட்சமாக 100 பக்தர்கள் மேல் கோயில் வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மேல் அனுமதி்க்கப்படமாட்டார்கள். குழந்தைகள், முதியோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிரசாதத்தையும், புனித நீரையும் யாரும் கையால் வழங்கக் கூடாது. மற்றவகை தேவையான வழிகாட்டுதல்களை தேவஸ்தானம் வரும் நாட்களில் வழங்கும்

சபரிமலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பெயர் உள்ளி்ட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். நிலக்கல், பம்பா, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆனால், சமூக விலகலைக் கடைபிடித்து 50 இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்தவரை பார்சல் உணவுகளை வழங்க முயற்சிக்க வேண்டும். உணவுப் பட்டியல் இருக்கும் மெனுகார்டை ஒரு முறை பயன்படுத்தும் அளவு காகிகத்தில் அச்சிட வேண்டும்,

அனைத்து இருக்கைகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும், உணவகங்களில் பணியாட்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருவதற்கு தனிப்பாதையும், வெளியேற தனிப்பாதையும் அமைக்க வேண்டும். இரு பாதைகளிலும் சானிடைசர் வைக்கப்பட வேண்டும் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பொருட்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்” இவ்வாறு பினராய் விஜயன் தெரிவித்தார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து