முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு நாளை அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை

திங்கட்கிழமை, 13 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைமலை அடிகளாரின் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாளை அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரை தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் அவர்கள் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். திராவிட மஞ்சரி, பாசுகர ஞானோதயம், நீலலோசனி, ஞானசாகரம் ஆகிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய நூல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதியும்,   திருவொற்றியூர் முருகன்,  மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலிய செய்யுள் நூல்களையும், சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்களுக்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் போன்ற கட்டுரை நூல்களையும், குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலிய புதினங்களையும் எழுதியுள்ளார்.  வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை மொழிபெயர்த்து  சாகுந்தல நாடகம் என்ற பெயரில் நூலையும்,  அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் எழுதியுள்ளார். 

மேலும், சைவம், தமிழ் இரண்டையும் தம் இரு கண்களாகக் கருதி,  சைவ சித்தாந்தமும் செயல்முறையறிவும் என்று ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகளாரை போற்றி சிறப்பிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளன்று ஆண்டுதோறும் மாலை அணிவித்து மலர்தூவி சிறப்பு செய்யப்படும் என தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால் தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2018-19ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பெற்றது. அதற்கிணங்க 2019ஆம் ஆண்டுமுதல் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்திலுள்ள மறைமலையடிகளாரின் நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு 15.07.2020 புதன்கிழமை  காலை 10.00 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டாட்சியரால் மாலை அணிவித்து, அவர்தம் திருவுருவப் படத்திற்கு மலர்தூவிச் சிறப்பிக்கும்  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து