முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி கயத்தாறை சேர்ந்த 17 பேர் பலி

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

இடுக்கி : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கயத்தாற்றைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 6-ம் தேதி பெய்த கனமழையில் பெட்டிமூடி தேயிலை தோட்டத்தில் இரவு சுமார் 10.45 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டது. இதில், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதைந்தனர்.

தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய கயத்தாறை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையறிந்த கயத்தாறை சேர்ந்த அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு வரை கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(46), அவரது மனைவி தவசியம்மாள்(45), மகள் மௌனிகா(18), முருகன்(48), அவரது மனைவி ராமலட்சுமி(39), மயில்சாமி(45), அவரது மனைவி ராஜேஸ்வரி(43), இவர்களது மகள் சிவரஞ்சனி (24), சண்முகநாதன் மகன் தினேஷ்குமார்(25), அனந்தசிவன் மகன் பாரதிராஜா(35) ஆகிய 10 பேர் உயிரிழந்த தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் காலை சண்முகையா(58), விஜிலா(45), குட்டிராஜ்(47), பவுன்தாய்(52), மணிகண்டன்(20), தீபக்(18), பழனியம்மாள்(50) என இதுவரை 17 பேர் உயிரிழந்ததை கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் உறுதி செய்தார். பெட்டிமூடி தேயிலை தோட்ட பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. இதனால் கயத்தாறில் உள்ள உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து