பீகாரில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் நடக்கும்: தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Election Commission 2020 07 29

Source: provided

புதுடெல்லி : கொரோனா நோய்த் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் பீகார் சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளன. 

பீகார் மாநிலத்தின் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நவம்பர் 28-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கவில்லை எனில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விடும். 

எனவே கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் தற்போதைய நிலையை கருத்திக் கொண்டால் பீகார் மாநிலத்தில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

துபற்றி அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்க ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி (நேற்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லோக் ஜனசக்தி கட்சி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் தற்போதைய சூழலில் தேர்தல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பீகாரில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து