முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகர் பிருதிவிராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர் பிருதிவிராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர். பின்னர் மொழி, ராவணன் ஆகிய பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜன கன மன என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கடந்த 7-ம் தேதியில் இருந்து அவர் கலந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைப்பிடித்தோம். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.  விதிகளின்படி, படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம்.

இதன் பின்னர் படப்பிடிப்பின் இறுதி நாளன்று முடிவில், பரிசோதனைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்த முறை எனக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.  எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. நலமுடனே இருக்கிறேன்.

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், பரிசோதனை மேற்கொள்ளும்படியும் கேட்டு கொள்கிறேன். குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புவேன். என் மீது அன்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார். இதே போன்று பட இயக்குனர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து