முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்க தமிழ்... தமிழில் டுவிட் செய்த கெஜ்ரிவால்

செவ்வாய்க்கிழமை, 5 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் டுவீட் செய்துள்ளார். 

டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ் சங்க உறுப்பினரை நியமித்தும் டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து, டெல்லி அரசின் தமிழ் அகாடமி அமைக்கும் முடிவுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் டுவீட் செய்திருந்தார்.

அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல்வர் மற்றும்  துணை முதல்வர் மிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்  எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து