எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில்,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளது. பறவைகள் மாயமாகி வருகிறது. நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.
மேலும் நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதியில் கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருவதாகவும், அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டுமானப் பொருட்களைக் குவித்துள்ளதாகவும், வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இது சம்பந்தமாக, மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வனப்பகுதியைக் கட்டுமானப் பொருட்கள் வைக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். வனப்பகுதியை ஆக்கிரமித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடுவட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட கலெக்டர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர், உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், இது சம்பந்தமான வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்குத் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ. 1,138 கோடி நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியீடு
19 Aug 2025சென்னை : ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தங்கம் விலை மேலும் சரிவு
19 Aug 2025சென்னை : தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
19 Aug 2025மதுரை : உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : நாளை கரையை கடக்கிறது
19 Aug 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மண்டம் தெரிவித்துள்ளது.
-
முன்னாள் படைவீரர்களுகளை தொழில்முனைவோராக்கும் 'காக்கும் கரங்கள்' திட்டம் தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன்
19 Aug 2025சென்னை : சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக. 19) தொடக்கி வைத்தார்.
-
டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி
19 Aug 2025சென்னை : டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
ஆப்பிரிக்கா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு
19 Aug 2025கின்சாஷா : ஆப்பிரிக்க நாட்டில் கிராமத்துக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர்.
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தான் அழகி..!
19 Aug 2025ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை ராஜஸ்தான் அழகி மணிகா விஸ்வகர்மா வென்றார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்டியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு
19 Aug 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் இன்டியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை
19 Aug 2025புதுடெல்லி : 2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி. குறித்து மாநில நிதி அமைச்சர்கள் இன்று டெல்லியில் கூடி குழு ஆலோசிக்கவுள்ளது.
-
எல்லையில் அமைதி: சீனா வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
19 Aug 2025புதுடெல்லி : கடந்த அக்டோபரில் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் உருவான அமைதி மற்றும் நிலைத்தன்மையால் பயனடைந்துள்ளன என்று சீன
-
தெலுங்கானாவில் சோகம்: பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் 9 பேர் பலி
19 Aug 2025ஐதராபாத் : தெலுங்கானாவில் நடைபெற்ற பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய கோர்ட்
19 Aug 2025நியூயார்க் : கூகுள் நிறுவனத்திற்கு ரூ.300 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்.
-
தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் ஏற்பார் என நம்புகிறேன்: முதல்வர்
19 Aug 2025டெல்லி : தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நீர்மலா சீதாராமன் ஏற்பார் என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
நமக்கு நாமே திட்டம்: அரசுக்கு ஓ.பி.எஸ்.கேள்வி
19 Aug 2025சென்னை, நமக்கு நாமே திட்டம் மூடுவிழாவை நோக்கிப் பயணம் செய்கிறது தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
19 Aug 2025டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
இந்திய முறையில் வணக்கம் வைத்த இத்தாலிய பிரதமர்
19 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில்இந்திய முறையில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி வணக்கம் தெரிவித்தார்.
-
வளர்ச்சியடைந்த பாரதத்தின் வேலைவாய்ப்பு திட்டம்: பொருளாதாரத்தை முன்னேற்றும் சீரிய திட்டம்: நயினார் பெருமிதம்
19 Aug 2025சென்னை : வேலைவாய்ப்பு திட்டத்தில் பொருளாதாரத்தை முன்னேற்றத்துடன் சீரிய திட்டமாகும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்
19 Aug 2025திண்டுக்கல், பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: ஜெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் உறுதி
19 Aug 2025வாஷிங்டன், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.
-
75 டன் எடையுள்ள செயற்கைக்கோள் : இஸ்ரோ புதிய முயற்சி
19 Aug 2025ஐதராபாத் : 75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம்: மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்
19 Aug 2025நெல்லை, பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம் காரணமாக மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
19 Aug 2025மைசூரு : கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்
19 Aug 2025புதுடெல்லி, ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.