எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாரீஸ் : பிரான்சில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையே நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார்.
ஆனால் இவரது நியமனம் போராட்டத்தை மேலும் தூண்டியது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர். இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் சென்றிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


