அனைவரும் தடுப்பூசி போட உதயநிதி வேண்டுகோள்

Udayanidhi 2021 06 13

Source: provided

சேலம் : பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க. சார்பில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். 

அதன் பின்னர் அவர் கூறுகையில், இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்றால் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து