முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிட் நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்தோனேசியா சென்றது ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டெல்லி: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கோவிட் -19 நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை நேற்று (ஜூலை 24, 2021) சென்றடைந்தது. பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு ஆதரவளிப்பதற்காக 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ பிராணவாயு மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.

நீரிலும் நிலத்திலும் இயங்கும் தன்மையுடைய ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல், பல்வேறு டாங்கிகளையும், தரையிலும் தண்ணீரிலும் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் இதர ராணுவ சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.  மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை அளிக்கும் பணிகளிலும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவும், இந்தோனேசியாவும் கலாச்சார மற்றும் வர்த்தக ரீதியில் நெருக்கமாக உள்ளன. பாதுகாப்பான இந்திய- பசிபிக் கடல் பகுதியை உருவாக்குவதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரண்டு நாடுகளின் கடற்படைகளும் இருதரப்பு பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு  ரோந்து நடவடிக்கைகளின் வாயிலாக தொடர்ச்சியான கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து