முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா விளையாடும் ஒருநாள், டி-20 போட்டிக்கான அட்டவணை வெளியீடு

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

2022-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை  பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

சுற்றுப்பயணம்... 

2022-ம்  ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. 

3 ஒருநாள் - டி20...

நியூசிலாந்து அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்னாப்பிரிக்கா மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடுகின்றன.

ஜூலை 1-ல்... 

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 2-ல் தொடங்கி ஜூன் 27-ல் முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒருநாள் தொடருடன் ஜூலை 19-ல் தொடங்கி டெஸ்ட் தொடருடன் செப்டம்பர் 12-ல் முடிவடைகிறது. இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஜூலை 1-ல் டி20 தொடருடன் தொடங்கி, ஜூலை 14 அன்று ஒருநாள் தொடருடன் முடிவடைகிறது. 

இந்திய அணி சுற்றுப்பயணம்: (2022-ம் வருடம்)

டி-20 தொடர்

  • 1) முதல் டி20 - ஜூலை 1, மான்செஸ்டர்.
  • 2) 2-வது டி20 - ஜூலை 3, நாட்டிங்கம்.
  • 3) 3-வது டி20 - ஜூலை 6, செளதாம்ப்டன்.

ஒருநாள் தொடர்

  • 1) முதல் ஒருநாள் - ஜூலை 9, பிர்மிங்ஹம்.
  • 2) 2-வது ஒருநாள் - ஜூலை 12, லண்டன் ஓவல்.
  • 3) 3-வது ஒருநாள் - ஜூலை 14, லண்டன் லார்ட்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து