பிரதமர் மோடி தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு துவங்கியது

modi-brics-2021-09-09

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2-வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று  பிரதமர் மோடி கூறினார். 

பிரதமர் மோடி தலைமையிலான 13-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த 13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது.  இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பிரிக்ஸ் உச்சி மாநாட்டு கூட்டத்தை 2-வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. பிரிக்ஸ் நாடுகள் கடந்த 15 வருடங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த பிரிக்ஸ் மாநாடு பயனுள்ளதாக உள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டின் தலைமையின் போது இந்தியா அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் முழு ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது. இதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பன்முக அமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாத எதிர்ப்பு, மக்கள் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட 4 முன்னுரிமை துறைகளை இந்தியா தனது தலைமைத்துவத்தில் கோடிட்டுக்காட்டி இருந்தது. இந்த துறை சார்ந்த விவாதங்கள் இந்த உச்சி மாநாட்டில் நடைபெற்றது. அதைப்போல கொரோனாவின் தாக்கம் மற்றும் தற்போதைய உலகளாவிய, பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து