முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்கள், நர்ஸ்களுக்கு உளவியல்ரீதியான பாதிப்பு ஏற்படுத்திய கொரோனா : ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகமான வேலைப்பளு, அழுத்தம், பிரச்சினைகளைச் சமாளிப்பது, கூடுதலாகப் பொறுப்புகள், புதுவிதக் கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றால் சுகாதாரப் பணியாளர்கள் உளவியல்ரீதியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஐ.சி.எம்.ஆர். நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 நகரங்களில் 967 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 54 சதவீதம் பேர் பெண்கள், 46 சதவீதம் பேர் ஆண்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 20 முதல் 40 வயதாகும்.

புவனேஷ்வர், மும்பை, அகமதாபாத், நொய்டா, தெற்கு டெல்லி, பத்தினம்திட்டா, காசர்கோடு, சென்னை, ஜபல்பூர், கம்ரூப், கிழக்கு காசிஹில்ஸ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

ஐ.சி.எம்.ஆர். நடத்திய இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதாரப் பணியாளர்களுக்கு மனரீதியான பிரச்சினைகளை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நோயாளிகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் மீதான அவதூறுகள், தாக்குதல்கள் குறித்து சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் வரும் செய்திகள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம், கிடைக்கும் அனுபவங்கள் பெரும் உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அவதூறுகள், தாக்குதல்களைச் சமாளிக்கும் விதத்தில், இந்தியாவில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டே வேறு நகரங்களுக்கு குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மன அழுத்தம், பதற்றம், அச்ச உணர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

நிர்வாக ரீதியிலும், பணிபுரியும் இடத்திலும் திடீரென ஏற்பட்ட மாற்றங்களும், அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வதிலும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். சமூக விலகல், பி.பி.இ. ஆடை அணிதல், கூடுதல் ஷிப்ட்கள், நேரம் பணிபுரிதல் போன்றவற்றுக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகவில்லை. நீண்டநேரம் பணியாற்றும் கலாச்சாரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகளையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்தின.

கொரோனா பணியில் இருக்கும்போது, தங்களின் அன்புக்குரியவர்களைப் பிரிந்திருத்தல், குடும்பத்தைப் பிரிந்து பணியாற்றுதல் போன்றவற்றால் குடும்பத்தைப் பராமரிக்க முடியாத நிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்பட்டது. மேலும், தான் குடும்பத்தோடு சேர்ந்திருந்தால், பழகினால் குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும். தங்களுக்கும் தொற்று ஏற்படும் என்ற அச்சம் எப்போதுமே சுகாதாரப் பணியாளர்களுக்கு இருந்தது மனரீதியான உளைச்சலை அளித்தது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து