முக்கிய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பேட்டிக்கு ஜெயக்குமார் பதில்

Jayakumar 2021 10 25

Source: provided

சென்னை : சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஓ.பி.எஸ்.தான் கூறினார். சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்து ஓ.பி.எஸ்.தான் தர்மயுத்தம் நடத்தினார்.  ஓ.பி.எஸ். பேசியதை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளோம். அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க கூடாது எனக் கூறியவர் ஓ.பி.எஸ் என்றார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்  என ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து