Idhayam Matrimony

300 பேரிடமும் சண்டை போட்ட இயக்குனர்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அக்செஸ் பிலிம் பேக்ட்ரி சார்பில் G.டில்லிபாபு தயாரிப்பில்  சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் GV பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம்   பேச்சிலர். இப்படம் டிசம்பர் 3  ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர்  G.டில்லிபாபு, 800 மணி நேரம் டப்பிங் செய்தது இது தான் முதல் முறை. இயக்குனர் சதீஷ் உடன் வேலை பார்க்க முடியாது என ஓடியவர்கள் நிறைய பேர். நான்கு படத்திற்கான உழைப்பை இந்தப்படத்திற்கு தந்திருக்கிறது படக்குழு. போஸ்ட் புரடக்சன் மட்டுமே 2 வருடம் ஆகியிருக்கிறது என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.மேலும், படத்தில் வேலை செய்த 300 பேரிடமும் சதீஷ் சண்டை போட்டுள்ளார். அவர் சண்டை போடாதது என்னிடம் மட்டும் தான், ஆனாலும், அனைவருமே அவர்களின் பெஸ்ட்டை தந்துள்ளார்கள். ஜீவியில் வாழ்வில் மிக முக்கியமான படமாக பேச்சுலர் படம் இருக்கும். நான் எடுத்துள்ள 6 படத்தில் 5 பேர் அறிமுக இயக்குநர்கள் தான், ராட்சசன் இயக்குனருக்கு மட்டுமே இரண்டாவது படம். நான் அடுத்து எடுக்கும் 6 படமும் புதிய இயக்குநர்களுக்குத்தான். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதை பெருமையாக கருதுகிறேன்.  சிறந்த திரைக்கதைகள் செய்தால் அதற்கான பாதை இங்கு இருக்கிறது. 2 வருஷம் இயக்குநர்  சதீஷ் கேட்ட அனைத்தையும் தந்திருக்கிறேன். இயக்குநருக்கான சுதந்திரத்தை தர வேண்டும் என்று நினைப்பவன் நான். நான் கண்டுபிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் சதீஷ். உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் என்றார். பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து