எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாகலாந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று விளக்கம் அளித்தார். மேலும் , அங்கு நிலைமை பதற்றமாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து நடந்த வன்முறையில், பொதுமக்கள் தரப்பிலிருந்து மேலும் ஒருவர் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர். தற்போது இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் நேற்று அமித் ஷா பேசுகையில், சனிக்கிழமை இரவு சம்பவம் நடந்த இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 21-ம் படை பிரிவை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அந்த வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர், ஆனால் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியதால் அதில் தீவிரவாதிகள் இருப்பதாக கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்பு வாகனத்தை சோதனை செய்ததில் தவறுதலாக சுட்டது தெரிய வந்துள்ளது. வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் சம்பவம் இடத்திலேயே பலியாகினர். மீதமுள்ள இருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ராணுவ வீரர்கள் கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் தகவலறிந்த கிராம மக்கள் ராணுவ வாகனத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு வீரர் பலியானார், மற்றவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது தற்காப்பிற்காக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி அசாம் ரைப்பிள் முகாமிற்குள் நுழைந்த 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமை அடித்து நொறுக்கினர். இந்த முகாமில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். நாகலாந்தின் தற்போதை நிலை பதற்றமாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளது. நாகலாந்து காவல்துறை இயக்குநரும், காவல் ஆணையரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். மாநில குற்றவியல் காவல்துறையிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவானது ஒரு மாதத்திற்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யும்.
பாதிக்கப்பட்ட இடங்களில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தலைமையகம் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், எதிர்பாராமல் நடந்த அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கு மன்னிப்பு கோரியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நாகலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது தலைமையில், தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு கண்காணித்து வருகின்றது. இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்
26 Feb 2026சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
27 Feb 2026மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
27 Feb 2026பென்னாகரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு
27 Feb 2026பகிர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் நேற்று (பிப். 27) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
-
ரஷ்யா செல்கிறார் பாக். பிரதமர்
27 Feb 2026லாகூர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.- ஆப்கானிஸ்தானுக்கு சீனா அழைப்பு
27 Feb 2026பெய்ஜிங், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
-
நேபாள பொதுத் தேர்தல்: 3 நாட்கள் இந்திய எல்லை மூடல்
27 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 2 முதல் 3 நாள்களுக்கு இந்திய-நேபாள எல்லை மூடப்படுகிறது.
-
5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்
27 Feb 2026டாக்கா, வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தென்கொரியாவை அழிப்போம்: வடகொரியா தலைவர் எச்சரிக்கை
27 Feb 2026பியாங்யாங், தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
-
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: வாபஸ் பெற்றார் ராமதாஸ்
27 Feb 2026சென்னை, மாம்பழ சின்னம் தொடர்பாக அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
-
தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. கண்டனம்
27 Feb 2026சென்னை, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.
-
பாகிஸ்தான் குண்டுமழை.. ஆப்கானிஸ்தானில் 133 பேர் பலி
27 Feb 2026லாகூர், தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது இதில் 133 பேர் க


