முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதிர் விளையும் நேரத்தில் ராமநாதபுரம், சாயல்குடியில் கருகிய 2000 ஏக்கர் நெற்பயிர் : விவசாயிகள் வேதனை

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சாயல்குடி : டிசம்பரில் போதிய பருவமழை யின்றி ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை சுற்றியுள்ள 40 கிராமங்களில் கதிர் விளையும் நேரத்தில் நெற்பயிர்கள் கருகின.

கடந்த ஆண்டு பருவமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற் பட்டதால், விவசாயிகள் கூடுதல் விலைக்கு உரம் வாங்கி பயிருக்கு இட்டனர். இதனால் கூடுதல் செலவும் ஏற்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பினாலும் கடலாடி வட்டாரத்தில் பல கண் மாய்கள் நிரம்பவில்லை.

இப்பகுதியில் பருவ மழையும் போதிய அளவு பெய்யவில்லை. வைகை தண்ணீரும் கிடைக்க வில்லை. சாயல்குடி அருகே காணிக்கூர், வாகைக்குளம், பிள்ளையார்குளம்,மறவர் கரிசல்குளம்,கீரந்தை, அல்லிக்குளம்,வெள்ளம்பல், புதுக்குடியிருப்பு மணிவலை, வேடகரிசல்குளம்,குருவாடி உள்ளிட்ட 40 கிராமங்களில் 50 சதவீத கண்மாய்களில் கால்வாசி கூட தண்ணீர் நிரம்பவில்லை. கடந்த டிசம்பரில் மிதமான மழை கூட பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் 2000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி விட்டன.

இதுகுறித்து பிள்ளையார் குளம் விவசாயி வீ. சத்தியமூர்த்தி கூறியதாவது., கடந்த ஆண்டு டிசம்பரில் போதிய மழை பெய்யாததால் கதிர் விளையும் நேரத்தில் நெற் பயிர்கள் கருகி விட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து