முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்: திருப்பூரில் எடப்பாடி பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று திருப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, சந்திராபுரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடந்த தேர்தலில் நம்மிடம் இருந்த சுணக்கத்தால் தி.மு.க. வெற்றிபெற்றது. ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் இழந்ததால், 45 தொகுதிகளை நாம் இழந்து விட்டோம். 9 மாதங்களில் எந்த திட்டத்தையும், இந்த ஆட்சியால் போட முடியவில்லை. இதனை மக்களுக்கு புரிய வைத்தாலே நாம் வெற்றி பெற்று விடலாம். பல பாலங்கள், கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது அ.தி.மு.க. அதனை தி.மு.க.வினர் திறந்து வைக்கின்றனர். தி.மு.க.வுக்கு இனி தேய்பிறைதான். மாநகராட்சியில் உள்ள எம்.எல்.ஏ.வைவிட, மேயருக்குத்தான் அதிகாரம் அதிகம். அப்பதவியை நாம் வென்றெடுக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்கலாம் என்று நான் சவால் விட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து