முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் பல விதமான சவால்களை சந்தித்தோம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
Nirmala-Sitharaman 2022 06-

Source: provided

புதுடெல்லி : நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப் பெரிய மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 5 ஆண்டுகளை நிறைவுசெய்து 6-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது. ஜிஎஸ்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.

விழாவில், கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக  அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நாம் சந்தித்திருந்தால் கூட, இந்த உற்சாக வரவேற்பை நாம் பார்த்திருப்போம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு கடுமையாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் பல விதமான சவால்களை சந்தித்தோம்.

ஜிஎஸ்டி தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் 2019ஆம் ஆண்டு எழுந்தன. வரி செலுத்தும் சமூகத்தை நேரடியாக அழைத்து, ஜிஎஸ்டி அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி பல சிக்கல்களை சரி செய்தோம். மத்திய நேரடி வரிவருவாய் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரி வாரிம் ஆகியவை துரிதமாக செயல்பட்டதால், வரி செலுத்துவோரிடையே நம்பிக்கை ஏற்பட்டது. அவர்களுக்கு, தங்களது கருத்துகளும் ஏற்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்ற எண்ணம் எழுந்தது. மேலும், குழப்பத்தை ஏற்படுத்தும் பல அடுக்கு வரி விதிப்பு நடைமுறை ஒழிந்தது என்றார் நிர்மலா சீதாராமன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து