LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரோகித்திற்கு கொரோனா...
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள சூழலில், நேற்றைய போட்டியில் இந்திய அணியை வழிநடத்த இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதற்கான அணி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரோகித்திற்கு பதிலாக மயங்க் அகர்வால் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோகித் தலைமை....
அதேநேரம், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் விவரங்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா, இந்த தொடர்களில் பங்கேற்பார் என்றும் அவரே அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் டி20 போட்டிக்கு ஒரு வகையான அணியும், இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கு ஒரு வகையான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனியர் வீரர்கள்...
டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சீனியர் வீரர்கள் முதல் டி20 போட்டியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அயர்லாந்து தொடரில் இடம்பெற்ற அதே இந்திய அணி அப்படியே கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் எனக் கூறியுள்ளனர். இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கு முழு பலம் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியிலும் வழக்கமான வீரர்களுடன் முதல் போட்டியில் இடம்பெற்ற ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக் போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஷிகர் தவான் தேர்வு...
மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் தேர்வாகியுள்ளார். கடந்த சில தொடர்களாக வெளிப்படுத்தி வரும் சிறந்த ஆட்டத்தின் காரணமாக ஷிகர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர், அயர்லாந்து தொடர் என டி20 அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வாகினாலும், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டி20 போட்டிக்கான அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
2வது. 3வது டி20 போட்டிக்கான அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.
3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 2 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 4 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 1 day ago |
-
75-வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார் : விருதுகள், பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார்
14 Aug 2022சென்னை : நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.
-
பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு
14 Aug 2022சென்னை, ஆக. 15- பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் : தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோருகிறார்
14 Aug 2022சென்னை : சென்னையில் இருந்து நாளை 16-ம் தேதி இரவு முதல்வர் மு.க.
-
75-வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து
14 Aug 2022சென்னை ; நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க.
-
பிரீமியர் லீக் கால்பந்து போட்டி: மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி
14 Aug 2022பிராண்ட்போர்ட் : 2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் பிரண்ட்போர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் - மான்ச
-
சென்னை அருகே துயர சம்பவம் : கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்
14 Aug 2022சென்னை ; திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
-
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை விரட்டியடித்த தலிபான்கள்
14 Aug 2022காபூல் ; காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன.
-
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?
14 Aug 2022மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது.
-
20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் - ரிக்கி பாண்டிங்
14 Aug 2022புதுடெல்லி : 20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
-
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Aug 2022மதுரை : மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-08-2022
14 Aug 2022 -
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா- மேடிசன் இணை அரையிறுதியில் தோல்வி
14 Aug 2022ஒட்டாவா : ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Aug 2022சென்னை : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்
14 Aug 2022வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
-
பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
14 Aug 2022ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்
14 Aug 2022புதுடெல்லி : கேலோ இந்தியா 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி லீக் டெல்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி யு -16 மகளிர் ஹாக்கி லீக் முதல் கட்ட போட்டிகள் வரு
-
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிமோனா ஹாலேப்
14 Aug 2022டொரண்டோ : கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சென்னையில் காந்தியின் திருவுருவ சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
14 Aug 2022சென்னை : தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை இன்று காலை 10.30 மணியளவில்
-
சல்மான் ருஷ்டியை தொடர்ந்து ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கும் டுவிட்டரில் கொலை மிரட்டல்
14 Aug 2022லண்டன் ; அமெரிக்காவில் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு? - காங்கிரசுக்கு 4 மந்திரிகள்
14 Aug 2022பாட்னா : பீகாரில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாகவும், காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
14 Aug 2022புதுடெல்லி பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியேற்றுகிறார் : முப்படை தளபதிகள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு
14 Aug 2022புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.
-
75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்: அமெரிக்காவில் தேசிய கொடியை ஏற்றும் இந்திய போர்க்கப்பல்
14 Aug 2022புதுடெல்லி : நாடு முழுவதும் இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
அமெரிக்காவில் விமானத்தை இயக்கி அசத்திய தாய், மகள் வலைதளங்களில் வீடியோ வைரல்
14 Aug 2022வாஷிங்டன் ; அமெரிக்காவில் பைலட்டுகளாக பணிபுரியும் தாய், மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள்.
-
புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு தொகுப்பு : ஒடிசா அரசு முடிவு
14 Aug 2022புவனேசுவரம் : ஒடிசாவில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.