முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வரும் 15-ம் தேதி அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      அரசியல்
TTV 2022 08 04

சென்னை வானகரத்தில் வரும் 15-ம் தேதி அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க. கட்சியின் துணைத் தலைவருமான அன்பழகன் தலைமையில், வருகிற 15-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து