முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
CM-3 2022 08 10

Source: provided

சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பிறந்த நாளன்று தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செஸ் ஒலிம்பியாட்...

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சார்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிர் பிரிவில் 162 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

17-வது பிறந்த நாள்...

ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார். இந்நிலையில் நேற்று தனது 17-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

வெண்கலப்பதக்கம்...

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ)  தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை நேற்று அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். நேற்று காலை இரு இந்திய செஸ் அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசுத்தொகையை முதல்வர் வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து