முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் என்ன கொலைகாரனா, கொள்ளைக்காரனா? ரசிகர்களுடன் ஜாலியாக பேசிய நடிகர் அஜித்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Ajith 2022 09 14

நான் என்ன கொலைகாரனா, இல்லை கொள்ளைக்காரனா என்று ரசிகர்களுடன் நடிகர் அஜீத் ஜாலியாக பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே. 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது பி.எம்.டபிள். யூ பைக்கை எடுத்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. 

இந்த நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார் என்று கூற, உடனே அஜித், தேடிட்டு இருக்கீங்களா? நான் என்ன கொள்ளைக்காரனா இல்லை கொலைகாரனா? என்று சிரித்தபடி கேட்டார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய் சொல்ல, அதன் பிறகு அஜித் அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து